
மட்டக்களப்பு – கரடியனாறு கொடுவாமடு பகுதியில் வீதியால் சென்ற நபர் மீது நேற்றிரவு கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஓட்டிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் ; விபத்து தொடர்பில் – நீதிமன்றில் ஆஜரான கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 50ஆயிரம் ரூபா சரீரப் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை விபத்தில் காயமடைந்த நபர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட நீதிமன்ற விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.