வீடு திரும்பிய பெண் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பு

கிருஷ்ணகுமார்

2022ஆம் ஆண்டு பணி பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த
ஒரு வருடங்களாக எது வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் கடந்த 2024 ​ டிசெம்பர் 19 ஆம் திகதியன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஓமான் சென்ற குறித்த பெண் கடந்த 11.01.2025 அன்று திடீரென் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்து உள்ளதாகவும். ஊடகங்கள் வாயிலாக
அறிவித்து ஒரு மாதத்திற்குள் எமது அக்காவை மீட்டுத் தருவதற்கு பேருதவியாக இருந்து செயற்பட்ட ஊடகங்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதாக குறித்த பெண்ணின் சகோதரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து உரிய குடும்பத்தினர் வியாழக்கிழமை(16) அவரது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு
தெரிவித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *