வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் பலி –தப்பியோடிய வாகன சாரதியும் கைது

Date:

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை சவளக்கடை வீதியில் பிலாலிவெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று (12) மாலை விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மண்டூர், சங்கர்புரத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியிருந்த நிலையில் பின்னர் தப்பிச் சென்றிருந்த சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய...

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த...

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப்...