வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினால் நிவாரண உதவி

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள் லயன்ஸ் கழக பிரதிநித களால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்குவதற்கான ஒரு தொகை நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் கழகங்கள் இணைந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைத்துள்ளனர்.

சுமார் ஒரு மில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் உலர் உணவு, படுக்கை விரிப்புக்கள், பாய், தலையைனை உள்ளிட்டு உடு துணிகள் என்பன அடங்குகின்றன.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...