வெள்ள அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த சம்மாந்துறை பிரதேச செயலாளர் குழுவினர்

Date:

பாறுக் ஷிஹான்

தொடர் மழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள 19 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் தற்காலிகமாக திங்கட்கிழமை (20) சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய இடை தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பார்வையிட சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம் , வீரமுனை
இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கெப்டன் தனுக, தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம், கிராம சேவகர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.

மேலும் தொடர் அடை மழை காரணமாக சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் வெள்ளம் வடிந்தோடுவதற்காக வான் கதவுகள் திறந்து
விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய...

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த...

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப்...