பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Date:

மட்டக்களப்பு – கிரான்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய மாணவி ஒருவரே இன்றையதினம் மதியம் 12.30 மணியளவில் வகுப்பறைக்குள் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மயங்கி விழுந்த மாணவியை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த மாணவி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரான்குளம் 8ஆம் பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த, க.பொ.தர சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய இராஜன் வினோஜினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரான் குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் குறித்த மாணவி வழமைபோல சம்பவ தினமான இன்று பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்து நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்று அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மாணவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனமதியை பெறும் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

றவூப் ஹக்கீம் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மி தலைவர்

றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே...

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம்...

தமிழ் இன அழிப்பு வாரம்…

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான...

29 கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று...