அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 24.5 வீதம் வாக்குப்பதிவு

Date:

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தற்போது வரை 24.5 வீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 4,78000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 19 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும்.இவ்வாறு உரிய இடங்களில் எண்ணப்பட்டு அப்பகுதிக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தெரிவிக்கப்படும்.பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள் குறித்து உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார்.

தொடர்ந்து வாக்குகள் உள்ளிட்ட சகல ஆவணங்களும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்திற்கு எடுத்து வரப்படும்.பின்னர் உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்றறும் அமைதியானதுமான தேர்தல் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றது.பெரியளவிலான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை.எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பு ஊடாக கிடைக்கப்பெற்றிருந்தன

மேலும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.மேலும் வாக்களிப்பு நிலையமான அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

றவூப் ஹக்கீம் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மி தலைவர்

றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே...

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம்...

தமிழ் இன அழிப்பு வாரம்…

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான...

29 கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று...