22 தாதியர்கள்  பிராந்திய வைத்தியசாலைகளுக்கு நியமிப்பு

சுகாதாரத்துறையினை வலுப்படுத்தும் நோக்கில் தாதியர் பயிற்சியினை நிறைவு செய்த 3147 பேருக்க அரசாங்கம் கடந்த 24ஆம் திகதி தாதியர் நியமனங்களை வழங்கியது.

அந்தவகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இணைப்புச் செய்யப்பட்ட தாதியர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாதிய உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை நிலையங்களுக்குரிய கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (30) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாட், பொதுச் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத், நிருவாக உத்தியோகத்தர் திருமதி எம்.எஸ்.வீ.வஜிதா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் இன்ஷாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய தாதியர் நியமனத்தின் ஊடாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 22 பேர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *