மட்டக்களப்பு மாவட்டத்தில் 60% சத வீதம் வாக்கு பதிவு நிறைவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் சுமுகமான முறையில் நடைபெற்ற நிலையில் 60.69வீதமான வாக்கு பதிவுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்.

144வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் மட்டும் 139 தேர்தல் விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஒரு தேர்தல் வன்முறைச்சம்பவம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (06) மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்ற இறுதி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *