உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Date:

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

தேவாலயம் மூடப்பட்டுள்ளமை காரணமாக தேவாலயத்திற்கு முன்பாக உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குண்டுவெடிப்பில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள், கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி 01 நிமிட அஞ்சலி மௌன செலுத்தினர்.

இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

றவூப் ஹக்கீம் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மி தலைவர்

றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே...

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம்...

தமிழ் இன அழிப்பு வாரம்…

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான...

29 கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று...