கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் – ஜனா பயணித்த வாகனம் இன்று (1) திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன் உள்ள பாதைசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வாகனத்தை நிறுத்திய போது பின்னால் வந்த அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து ,நிறுத்தி வைக்கப்பட்ட வேனில் பின் பக்கம் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இது தொடர்பாக உப்புவெளி போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
