பாறுக் ஷிஹான்

இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அசௌகரியம் அதிகளவில் ஏற்பட்டு வீதி விபத்து ஏற்பட வாய்ப்புக்கள் கட்டாக்காலி மாடுகள் ஏற்படுத்துவதாகவும் காரைதீவு பிரதேச சபையும் மற்றும் காரைதீவு பொலிஸ் நிலையும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கமைய கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களும் இவ்வாறான நிலைமைகளை கண்டுகொள்வதில்லை என்பதனால் நடவடிக்கை எடுக்க காரைதீவு பிரதேச சபையும் மற்றும் காரைதீவு பொலிஸ் நிலையும் இணைந்து பிடித்து அதன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டப்பணம் அறவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை வீதிகளில் அலைய விடாமல் பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.