இராணுவ முகாம் காணி பொது மக்களிடம் கையளிப்பு

Date:

அம்பாறை காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த இராணுவ முகாம் காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம் வெள்ளிக்கிழமை (10) உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன.

இதே வேளை இராணுவ முகாம் அமைந்திருந்த காணியில் தனியார் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.அதனை பொறுப்பேற்பதற்காக இது தொடர்பான உத்தியோகப்பூர்வ நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணனிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த 35 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் காரைதீவு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கான காணிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிழக்கு மாகாண இராணுவ அதிகாரிகள் உட்பட உயரதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

1990 ஆம் அண்டு காலப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணியில் இராணுவ முகாம் நிலைகொண்டிருந்தமையை தொடர்ந்து அதில் இருந்த பிரதேச சபையும் பொது நூலகமும் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி கொண்டிருந்தது. இதனால் மாணவர்கள் தங்களது கல்வியை பின் தொடர்வதற்கு போதிய இட வசதி இன்றி பெரும் சிரமப்பட்டு வந்தனர்.

வட-கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த கட்டத்தில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ் முகாமை அகற்றி பிரதேச சபை பொது நூலக கட்டிடத்தை மீள ஒப்படைக்குமாறு கடந்த காலத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் முதற் கட்டமாக இவ் இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதுடன் இம் மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள மேலும் ஒரு சில இராணுவ முகாம்கள் கட்டம் கட்டமாக அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது காரைதீவில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் கல்முனை முகாம் நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள்...

செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று...

மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம்

மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம்...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள...