வளர்ப்பு நாய்கள் கட்டக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி

பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சென்னல் கிராம பகுதியில் 7 பேரை கட்டக்காலி நாய் கடித்த சம்பவம் கடந்த மார்ச் புதன்கிழமை(12) பதிவாகி இருந்தது.

இதற்கமைய 7 பேருக்கு கடித்த நாயின் மாதிரி அறிகுறி ரேபிஸ் பாசிட்டிவ் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (எம்ஆர்ஐ) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப் பிரதேசத்தில், பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் ஆலோசனைக்கமைய மாவட்ட மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு பங்கேற்று உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *