
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிட பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோருக்கு இடையே திங்கட்கிழமை (04) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் UNDP ஆல் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதுடன் தொடர்ந்தும் நடைபெற்று வரும் வீட்டு திட்டங்கள், வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்களை நிறுவுதல் குறித்து மேலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது.