அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 01 ஆவது சபையின் கன்னி அமர்வு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்றது.
தவிசாளரின் கன்னி உரையினை நிகழ்த்தியதுடன் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து தவிசாளரினால் சகல உறுப்பினர்களுக்கும் கருத்தை தெரிவிக்கும் வகையிலான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
சபைக்காக தெரிவு செய்யப்படவேண்டிய அபிவிருத்தி நிதி நிர்வாக தொழிநுட்ப போன்ற பல்வேறு ஆலோசனை, பெறுகை போன்ற குழுக்கள் நியமிப்பதற்கான அங்கீகாரமும் பெற்றப்பட்டது.

இன்றைய கன்னி அமர்வில் முக்கியமான இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பலஸ்தீன காசா மக்களுக்கு என்றும் ஆதரவாகவும் சட்டவிரோத இஸ்ரேலால் அங்கு இடம்பெறும் இன அழிப்புக் எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் சட்ட விரோதமாக இஸ்ரேலின் குடியேற்றங்கள் மற்றும் சபாத் இல்லங்களை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு எதிராக கண்டன ஆரப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம். பாறூக் நஜீத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பாறுக் ஷிஹான்
