கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று(27) பகல் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

பாராளுமன்றத்தில் தற்போது முன்மொழியப்பட்டு வாதிடப்பட்டு வரும் 2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று பகல் போராட்டம்முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடாத்தப்பட்டது.
இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
