கிருஷ்ணகுமார்
இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்தி இப்தார் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி சிறிக்காந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் மற்றும் மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எம்.எஸ்.எம்.சுபீயான் மற்றும் திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷேக் எஸ்.எல்.எம்.நஷ்மத் பலாஹி றம்லான் நோன்பு தொடர்பிலான சிறப்பு சொற்பொழிவாற்றினார். தமிழ்-முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
