
மட்டக்களப்பு,பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா சிறப்பாக நடைபெற்றது.
பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கலைப்பணியாற்றிவருகின்றது.

இந்த நிலையில் குறித்த பள்ளியில் நாட்டியத்துறையில் கற்றுவரும் மாணவர்களுக்கான சதங்கை அணி விழா சிறப்பாக நடைபெற்றது.
பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து சதங்கை அணி விழா சிறப்பாக நடைபெற்றது.

கணேஷாலயா நாட்டிய பள்ளியின் ஸ்தாப தலைவர் திருமதி பிரசன்னியா சுரேஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு சதங்களை அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகுமார்