கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் வயற்பிரதேசத்திலுள்ள 19 அடியுடைய பொதுக்கிணறு ஒன்றிலிருந்து 67 வயதுடைய வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேசத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா தவராசா என்பவரே மரணித்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.

நீண்டநாட்களாக நோயினால் பிடிக்கப்பட்டிருந்த இவர் மதியம் தொடக்கம் காணாமல் போயுள்ளார். இதையடுத்து குடும்ப உறவினர்கள் தேடியபோது வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலுள்ள பொதுக்கிணற்றிற்கு அருகில் செருப்பு காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

பின்னர் நீளமான தடியொன்றை கிணற்றில் விட்டுப்பார்த்தபோது உடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. கிணற்றில் சுமார் 16 அடி ஆழமாக தண்ணீர் காணப்படுகிறது.

திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆயித்தியமலை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *