கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்

Date:

அரசாங்கம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரிடம் பல விடயங்களில் அதிருப்திகள் இருக்கின்றன. இது ஒரு நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.இவ்விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டினால் முஸ்லிம் சமூகம் ஏமாந்த நிலையில் உள்ளது. முஸ்லிம்கள் தங்களது உணர்வலைகளை கொண்டு தீர்மானம் எடுப்பவர்கள்.

இதிலும் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.இஸ்ரேல் நாட்டிற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனின் விவகாரத்திலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் முஸ்லீம் சமூகம் அசௌகரியத்தில் உள்ளது.

இது தொடர்பில் உரிய தரப்பினர் மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக முஸ்லிம் மக்கள் ஆறுதலடைய கூடிய சந்தர்ப்பம் வரலாம். என சமூகம் சார் நடவடிக்கைகள் திறன் விருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான மைய (ஹெஸ்ட்ரோ) தலைவர் எம்.ஜே.எம். அன்வர் நௌஷாட் தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(6) இரவு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

போதைப்பொருளுடன் இருக்கின்ற உறவு இளைஞர்களுக்கு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.அரசியல் தலைமைகள் தங்கள் அதிகார கதிரைக்காக இளைஞர்களை பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது நீண்ட காலமான ஒரு குற்றச்சாட்டாக இருக்கின்றது.

ஆனால் இந்த நாட்டில் முதலாளித்துவத்தில் இருந்து சோசலீசமாக மாறுகின்ற போது இசசந்தர்ப்பத்தில் இவ்வதிகார கதிரை ஆசை முறியடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போதைப்பொருளுடன் தொடர்புபட்ட குறித்த இளைஞர்கள் தேர்தல் வருகின்ற பொழுது அரசியல் கட்சிகளுடன் இணைந்து தங்களது செயல்களை மறைப்பதற்காக தூண்டப்படுகின்றார்கள்.

ஆனால் இவற்றை நிறுத்துவதற்கு எதிர்வரும் தேர்தல் முடிவு சான்றிதழ் அளிக்கும் என நினைக்கின்றேன்.இந்த தேர்தலில் எந்தவொரு போதைப்பொருள் பாவனையாளருக்கோ அல்லது போதைப்பொருள் விற்பனையாளருக்கோ ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்பது சிவில் சமூகத்தினரது எதிர்பார்ப்பாகும்.மக்களின் எதிர்பார்ப்பு என்பது போதைப்பொருளுக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக ஒரு கோரிக்கையாக மாறியுள்ளது.

அரசாங்கத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர்கள் ஊழல்களை ஒழிக்கின்றார்கள் என்ற நேர்கோட்டில் அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றார்கள்.அதே போன்று போதையை ஒழிக்க வேண்டும் என அனைவரும் ஒன்றாக பயணிக்கின்றார்கள்.இதில் அரசியல் பேதமில்லை.தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் விசேடமாக முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் உள்ளுர் வளங்களை கொண்டு ஒரு கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.

அதே போன்று கிழக்கு மக்களை அடிமைகளாக்ககின்ற சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்.அதற்காக இந்த சிவில் சமூகம் முழுமையாக குரல் கொடுக்கும் என்பதை இவ்விடத்தில் உறுதியாக கூறமுடியும்.

அரசாங்கம் தொடர்பில் முஸ்லீம் சமூகத்தினரிடம் பல விடயங்களில் அதிருப்திகள் இருக்கின்றன.அதாவது இவ்வரசாங்கத்தில் முஸ்லீம் சமூகத்தினருக்கான உரிய இடம் வழங்கப்படவில்லை.

இது ஒரு நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.இவ்விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டினால் முஸ்லீம் சமூகம் ஏமாந்த நிலையில் உள்ளது.இது தவிர பலஸ்தீன் காசா விடயத்தில் இந்த அரசாங்கத்தின் தெளிவினை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.முஸ்லீம்கள் தங்களது உணர்வலைகளை கொண்டு தீர்மானம் எடுப்பவர்கள்.இதிலும் அரசாங்கத்தில் முஸ்லீம் மக்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் நாட்டிற்கு ஸ்ரிக்கர் ஒட்டிய இளைஞனின் விவகாரத்திலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் முஸ்லீம் சமூகம் அசௌகரியத்தில் உள்ளது.இது தொடர்பில் உரிய தரப்பினர் மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக முஸ்லீம் மக்கள் ஆறுதலடையக் கூடிய சந்தர்ப்பம் வரலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் மேற்சொன்ன குறைபாடுகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்க கட்சி முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் போட்டியிடுகின்ற போது இதனை முஸ்லீம் கட்சிகள் நிச்சயமாக பெரிது படுத்தும்.இது தொடர்பில் வாதப்பிரதிவாதம் தொடரும்.

எனவே தான் அதற்கான தீர்வினை மக்கள் வழங்குவதற்கு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.இது குடும்பத்தேர்தல் ஆகும்.அதாவது கட்சி அரசியலை விட உறவு தொடர்பாடலே இத்தேர்தலின் வெற்றி தங்கியுள்ளது.இவ்வாறான இளைஞர்களை தேசிய மக்கள் சக்தி இணைத்துக்கொள்ள வேண்டும்.அவ்வேட்பாளர்கள் மத்தியில் முதிர்ச்சியற்ற தன்மையும் உள்ளது என்பதையும் சிவில் சமூகம் உணர்கின்றது.

அத்துடன் இலங்கை மக்கள் அனைவரும் பலத்த எதிர்பார்ப்புடன் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள்.கடந்த கால ஆட்சி மாற்றங்கள் யாவும் இரு முதலாளி கட்சியிடையே சிறு போராட்டமானவே இடம்பெற்று வந்தது.

குறிப்பாக இவ்வரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்து மக்களிடையே அதிக வாக்குகளை பெற்று தந்திருக்கின்றது.இதை விட ஆட்சியாளர்கள் அரசாங்கம் அமைத்து 6 மாதங்களே கடந்துள்ளது.அவர்களது ஆட்சிக்காலம் இன்னும் இருக்கின்றது.

இதே வேளை சில இடங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியவில்லை என்பதை சிவில் சமூகம் அறிந்துள்ளது.தற்போது அரசாங்கத்தை நோக்கி மக்கள் விரல் சுட்ட ஆயத்தமாகியுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் தேர்தலை நடாத்தி மக்களிடையே வீழ்ச்சியடைவது என்பது தவிரக்க முடியாத ஒன்று.ஏனைய கட்சிகள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதற்காகவே தேசிய அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பி சகல மக்களும் வாக்களித்தார்கள் என்பது உண்மையாகும்.

அவ்வாறு இவர்களும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுவார்கள் ஆயின் மக்கள் எதிர்கால தேர்தலில் நிச்சயமாக பாடம் படிப்பிக்க தயாராவார்கள்.அதே போன்று இத்தேர்தலில் முஸ்லீம் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.என்பதை சிறுபான்மை மக்கள் தெளிவாக அறிந்த கொள்ள வேண்டும்.

வேட்பாளர்கள் தங்களது கருத்துக்களை மக்கள் மீத திணிக்காமல் எதிர்கால திட்டங்களை குறிப்பிட்டு இத்தேர்தலில் எதற்காக போட்டியிடுகின்றோம் என்பதை மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றோம்.எனவே அனைவரும் வாக்களிக்க முடியும் என சிவில் சமூகம் கேட்டக் கொள்கின்றது என தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மருதமுனை அக்பர் வீதி புனரமைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100...

விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதை மீண்டும் மக்கள் பாவனைக்கு…

மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள்...

இயற்கையுடன் கூடிய பயிற்சி நிலையம் அமைக்க செயற்திட்ட முன்மொழிவு

மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில்...

பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு...