பாறுக் ஷிஹான்
அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தின் பாணமை தொடக்கம் பெரியநீலாவணை வரையான சுமார் 110 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையோரத்தினை சுத்தம் செய்ய கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை (15) ஆரம்பமானது.இதன் போது இவ்வேலைத்திட்டத்தை பொத்துவில் அறுகம்பையில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம ஆரம்பித்து வைத்தார்.

இதன் அடிப்படையில், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், காரைதீவு பிரதேச செயலகம், நிந்தவூர் பிரதேச செயலகம், நாவிதன்வெளி பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு இநிந்தவூர், நிலையங்கள், கல்முனை தலைமையக பொலிஸ், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பாடசாலை மாணவர்கள், என பல தரப்பினரும் பங்கெற்றனர்.

இதன் போது, கடற் கரையோரத்தினை சுத்தம் செய்வது தொடர்பான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


