பாறுக் ஷிஹான்
கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை முழுமையாக அகற்றும் மற்றும் கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று (01) தொடங்கியது.

மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபியின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கினார்.

முதல் கட்டமாக, சாய்ந்தமருது பிரதேசத்தில் திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டு, கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது. இந்த முயற்சியில் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.

வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஏ.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜெளசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இவ்வேலைத்திட்டம் தொடர்ந்து கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மற்ற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படும் என மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி தெரிவித்துள்ளார்.
