நிந்தவூர் பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, அஷ்ரப் தாஹிர், மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது ஆக்க பூர்வமான கருத்துக்களையும் முன்வைத்தனர்.

இறுதியாக நிந்தவூர் பிரதேச எல்லைக்குட்பட்ட சிறந்த திட்டங்களை மக்களின் தேவை கருதி பாராளுமன்ற உறுப்பினரும்இ ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான யு.ஆதம்பாவா அவர்கள் பிரதேச செயலாளருக்கும்இ உரிய திணைக்கள தலைவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேலும் சில செயற்திட்டங்களை மக்களுக்காக உரிய அமைச்சுகளூடாக இப்பிரதேசத்திற்கு கொண்டுவருவதாகவும் சபையில் தெரிவித்தார்.

அத்துடன் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பொலிஸ், இராணுவ, அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை முன்வைத்தல், ஆகியவற்றுடன், பிரதேச மட்டத்திலான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *