சுதந்திர தினத்தை முன்னிட்டு 7 பேருக்கு தடையுத்தரவு

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுதந்திர தினமான நாளை ஆர்ப்பாட்டங்கள மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழுபேருக்கு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இலங்கை குடியரசின் தேசிய தினம் 04-02-2025 அன்று கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பில் 08வது சரத்தில் கூறப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் காந்திபூங்காவில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வினை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்ப்பாட்டத்தினையோ எந்தவொரு சட்ட விரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று நியாயதிக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக்கூடாதென குறித்த ஏழு பேரின் பெயர் குறிக்கப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவர் அ.அமலநாயகி,செயலாளர் சுகந்தினி,அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் ஆகியோருக்கு இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி,தமிழர்களுக்கான உரிமையினை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வடகிழக்கில்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
நாளைய தினம் மாபெரும் பேரணிக்கும் போரராட்டத்திற்கும் மட்டக்களப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொள்வதற்காகவுள்ளனர்.

இதேநேரம் ஜனநாயகத்தினை பாதுகாக்கப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டில் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் தமது உரிமைக்காக போராடும் உரி;மையிருக்கும்போது தமிழர்களுக்கும் மட்டும் அந்த உரிமையினையும் மறுக்கும் செயற்பாடுகளையே இந்த நாட்டில் ஆட்சியமைக்கும் அதிகாரங்கள் iகெயிலெடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் கைது

கிருஷ்ணகுமார் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்...

மாடு திருடிய தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர்...

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி...