நடப்பு அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

Date:

கிருஷ்ணகுமார்

காதலிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகளை கல்யாணத்தின் பின்னர் நிறைவேற்ற முடியாதவர்கள் போல் ஆகிவிட்டனர் தற்போதைய ஆட்சியாளர்கள் என அம்பாரை மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் இணை அமைப்பாளர் வெ.வினோகாந்த் குற்றம் சுமத்தினார்.

அக்கரைப்பற்றில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

சோற்றுடன் சம்பலை வைத்து உணவருந்திய அன்றாட தொழிலாளர்கள் இன்று சோற்றுக்கே போராடுகின்றனர். அந்த அளவிற்கு நாட்டில் அரிசியும் இல்லை. தேங்காயும் இல்லை. சிலநேரம் சம்பலுடன் சாப்பிட முடியாத குடும்பங்கள் உப்புடன் சோற்றை உண்ட வரலாறுகளும் இங்குண்டு. ஆனால் இன்று உப்பும் இல்லை. கடலால் சூழப்பட்ட எமது நாட்டில் உப்புக்கூட இல்லை.

இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தாண்டி சோத்துக்கே அங்கலாய்க்கும் நிலையினை உருவாகிவிட்டது.

குறைகளை கூறி கொண்டிருப்பவர்களால் செயற்படமுடியாது என்பதற்கு இந்த அரசு நல்ல உதாரணம். இவர்கள் எதிர்;கட்சியாக இருந்தபோது குறைகளையே கூறிக்கொண்டிருந்தனர். சாதாரணமாக ஒரு தொழிலுக்கு செல்லும்போது கூட நேர்முகப்பரீட்சையில் முன்அனுபவம் இருக்கிறதா என கேட்பார்கள். அதுபோல் ஆட்சி அதிகாரம் செய்வதற்கும் முன் அனுபவம் வேண்டும்.

ஆனாலும் எந்த முன்அனுபவமும் இல்லாத இவர்களால் எப்படி நல்லாட்சி செய்ய முடியும். இதுபோலதான் 2019 இல் எந்த முன்அனுபவம் இல்லாத ஒருவருக்கு ஆட்சியை வழங்க வேண்டாம் என கூறினோம் . ஆனாலும் கோத்தபாய ஆட்சிக்கு வந்தார். அதுபோலவே இப்போதும் நடந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த அரசாங்கம் ஆசை வார்த்தைகளை கூறி அதிகளவான வாக்கினை அள்ளிக்கொண்டனர். மக்கள் பல கனவுகளோடு வாக்களித்தனர். கனவுகள் கனவுகளாகவே மாறிவிட்டன.
இதன் காரணமாக எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டு முன்னர் மீண்டும் நாம் அன்றாட உணவிற்காக வரிசையில் நிற்கும் நிலைவரும் என்றார்.

இந்நிலையில் கிராமங்களுக்கான பாராளுமன்றமாக கருதப்படும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மக்கள் சஜித்பிரேமதாசா அவர்களை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதன் மூலம் பசித்தவர்கள் இல்லாத இலங்கையை உருவாக்க வேண்டியது நமது ஒவ்வொருவரதும் பொறுப்பு என்றார்.

ஒலிவாங்கி மூலமாக மாத்திரம் அவர்கள் பேசிகொண்டு வருகின்றனர். இதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஆகவே மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு எனும் அதிகாரத்தை பயன்படுத்தி சரியான தக்க பதிலடி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை: தீர்ப்பு ஒத்திவைப்பு

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க,அவரின் வருகைக்காக வீதியில்...

மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா

காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு...

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவஞ்சலி நிகழ்வு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை...