20 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திடீரென பெய்த மழை ஓய்ந்ததன் காரணமாக சில நாட்களுக்குள் 20 டெங்கு நோயானவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசீர்தீன் தெரிவித்தார்


காத்தான்குடி பிரதேசத்தில் திடீரென இம்மாத ஆரம்பத்திலிருந்து கடந்த சில நாட்களுக்குள் இவ்வாறு அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இதனை அடுத்து டெங்கு நுளம்புகளை கண்டறியும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
நேற்று இப்பிரதேசத்தில் உள்ள 100 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின் போது 45 வீடுகளில் டெங்கு குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகும் வகையில் சூழலை வைத்திருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன் சில தினங்களுக்குள் அவற்றை சீர் செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்
குறித்து எச்சரிக்கையும் மீறி சுற்றுச்சூழலை வைத்திருந்த சில வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...