
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பிரதேச இளைஞர் அமைப்பாளராக சமூக ஆர்வலர் எ.ஆர்.எ .ஜெவ்ஸான் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(20) மருதமுனை மத்திய குழு கூட்டத்தில் இடம்பெற்றது.
இதன் போது கட்சியின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் முதுநபீன் , கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், மற்றும் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் கட்சிப் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாறுக் ஷிஹான்


