பள்ளிவாசலில் சத்தியப் பிரமாணம் செய்த இறக்காமம் சபை உறுப்பினர்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான சுயேட்சைக்குழு பிரதிநிதியாக போட்டியிட்டு தெரிவான கே.எல்.சமீம் (எல்.எல்.பி) இறக்காமம் பெரிய ஜும் ஆப் பள்ளிவாசலில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி கடந்த சனிக்கிழமை (31) வெளியாகியிருந்தது.இதற்கமைய வெளியான அரச வர்த்தமானிக்கிணங்க இறக்காமம் பிரதேச சபை உறுப்பினராக இன்று அஸர் தொழுகையின் பின்னர் இறக்காமம் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன் சமாதான நீதவான் பிறை எப். எம் அறிவிப்பாளர் அஸ்வர் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் பிரதம இமாம் றசீட் மெளலவி துஆப் பிரார்த்தனை மேற்கொண்டார்.

இறக்காமம் வரலாற்றில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பள்ளிவாயலில் சத்தியப் பிரமாணம் செய்தமை இதுவே முதற் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *