சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியார் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திங்கட்கிழமை(14) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தேசிய காங்கிரஸின் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வருகை தந்து சென்ற பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உட்பட ஆதரவாளர்களால் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீல் உட்பட அவரது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் முதல் தேர்தல் வன்முறை சம்பவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *