யானை – மனித மோதலை குறைக்கும் விழிப்புணர்வு வேலைத்திட்டம்

மட்டக்களப்பில் யானை – மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு தும்பாலஞ்சோலை கிராமத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டார பொறுப்பதிகாரி நா. சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்டோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தும்பாலஞ்சோலை கிராமத்தில் யானைகள் அதிகம் வரும் காடுகளாக உள்ள வனாந்தர பகுதி சிரதானம் செய்யப்பட்டதுடன், அங்கு வீதிகளில் மின் விளக்குகளும் பொருத்தும் நடவடிக்கையும் இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த கிராமங்களில் வீடு வீடுடாகச் சென்று யானை வருவதை தடுக்கும் முகமாக மக்களுக்கான விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன் , துண்டுப்பிடசுரமும் வினியோகிக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *