இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு காந்திபூங்காவில்…

இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது இன அழிப்பு வாரம் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலமாக சென்று காந்திபூங்காவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் அகவணக்கமும் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இறுதி யுத்ததில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது இறுதி காலப்பகுதியில் பரிமாறப்பட்ட கஞ்சியும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *