மாளிகைக்காடு சுற்றுச்சூழல் சுகாதாரம் தொடர்பான கள ஆய்வு

அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு கிழக்கு கடற்கரை பகுதி சுற்றுசூழல் சுகாதாரம் தொடர்பான கள ஆய்வு மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான பரிசோதனை செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

இதன் போது காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் ,காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லீமா வசீர், பொது சுகாதார பரிசோதகர் உத்தியோகாதர்கள், பகுதி கிராம சேவகர், காரைதீவு பிரதேசசபை செயலாளர், கடற்சூழல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், மீன்வாடி சங்க உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் கொண்டனர்.

இதன்போது இப்பகுதி வியாபார நிலையங்களின் திண்ம, திரவ கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான தொழிநுட்ப திட்ட ஆலோசனை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் முன் மொழியப்பட்டது. மேலும் இப்பகுதியில் அனைத்து அரச நிறுவனங்களின் பங்களிப்போடும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *