மருதமுனை அக்பர் வீதி புனரமைப்பு

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அதன் ஒரு அங்கமாக மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் மழை காலங்களில் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக உள்ளதை நிவர்த்திக்கும் வகையில் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் மருதமுனை அக்பர் வீதியின் குறுக்கு வீதியான “கலாபூசணம் பீ.எம்.எம்.ஏ. காதர் வீதி” மற்றும் “மக்பூலியா வீதி” ஆகியவற்றை கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்க சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ள இந்த வீதிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலும் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...