பாறுக் ஷிஹான்
தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில், தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு இலவச குர்ஆன் பிரதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை தாறுஸ்ஸபா தலைமையகத்தில் வியாழக்கிழமை (30) மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச பதில் பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் (எல்.எல்.பி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமுக சேவைகள் அதிகாரி எம்.எம்.எம். ஜெய்சான், கல்முனைக்குடி 09 பிரிவு கிராம சேவகர் எம்.ஏ . றஹ்னா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றிப்கா ஜெஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகளை வழங்கி, கல்வி மற்றும் மத துறையில் அவர்களது முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
