
மட்டக்களப்பு மாவட்டத்தின் விசேட தேவையுடைய பிள்ளைகளைக்கொண்டு இயங்கும் கருணையில்லத்தின் நிரந்தர கட்டிடத்தினை பூர்த்திசெய்வதற்காக ஒரு தொகை நிதியுதவி இன்று வழங்கிவைக்கப்பட்டது.
வாழைச்சேனையில் தற்காலிக வாடகை கட்டிடத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளைக்கொண்டதாக கருணை இல்லம் இயங்கிவருகின்றது.
இதற்கான நிரந்தர கட்டிட தேவையின் அவசியம் கருதி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட மாவடிவேம்பு பகுதியில் நிரந்தர கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளபோதிலும் நிதிவசதிகள் இல்லாத காரணத்தினால் அதன் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அண்மையில் அங்கு விஜயம் செய்த இலண்டனை சேர்ந்த சமூக சேவையாளர் கோபிகிருஸ்ணாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் ஊடாக இலண்டனில் உள்ள பிரித்தானியா பெரியகல்லாறு மக்கள் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனடிப்படையில் பிரித்தானியா பெரியகல்லாறு மக்கள் ஒன்றியத்தினால் கோபிகிருஸ்ணா ஊடாக 15இலட்சம் ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டது. இதில் ஒரு தொகுதி நிதியை பிரித்தானிய பெரியகல்லாறு ஒன்றியமும் ஒரு தொகை நிதியை குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகரும் சமூகசேவையாளருமான எஸ்.கோபிகிருஸ்ணாவும் வழங்கியிருந்தனர்.
இதனை உத்தியோபூர்மாக வழங்கிவைக்கும் நிகழ்வு கருணை இல்லத்தில் நடைபெற்றது.இந்த நிதியானது கருணை இல்ல நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
கிருஷ்ணகுமார்


