தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம்

Date:

கிருஷ்ணகுமார்

கிழக்கிலங்கையின் மிக பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (02) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தேற்றாத்தீவின் இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையில் அமர்ந்து வருவோருக்கு வேண்டும் வரமளிக்கும் வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.

வெள்ளிக்கிழமை (31) மற்றும் சனிக்கிழமை (01) வரையில் என்ணைக்காப்பு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான அடியார்கள் எண்ணெணைக்காப்பு சத்தும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கிரியா காலத்தில் பிரதிஸ்டா பிரதம குருவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. க.வடிவேல் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்களினால் இந்த கும்பாபிசேக கிரியைகள் நடாத்தப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை (02) விசேட ஹோமபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று மந்திரங்க்ள முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மணிதூபி, பிள்ளையார் ஆகிய ஆலயங்கள் அபிசேகம் செய்யப்பட்டதுடன் பிரதான தூபி மற்றும் நாகதம்பிரான் ,வீரபத்திரர், பைரவர் ஆகிய ஆலயங்களுக்கும் அபிசேகம் செய்யப்பட்டன.

இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தி நாயகியாகவுள்ள வடபத்திரகாளியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்கள் வழிபடும் வகையில் தசமங்கல தரிசனம் செய்யும் வழிபாடும் நடாத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...