செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

Date:

கிருஷ்ணகுமார்

சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட பிரசித்திபெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

05ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவந்த நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் கும்பாபிசேக கிரியைகள் நடைபெற்றன.

இன்று காலை விசேட பூஜைகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி யாக குண்டங்களின் யாக பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து பிரதான கும்பம் உட்பட கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பிரதான தூபி மற்றும் பரிபாலன தெய்வங்களின் தூபிகள் அபிசேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதான கும்பம் கருவறைக்குள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சிவ மேளங்கள்,நாதஸ்வர இசை முழங்க பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிசேகத்தினை தொடர்ந்து தசமங்கல தரிசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இன்றைய கும்பாபிசேக நிகழ்வில் சித்தர்கள் பலர் கலந்துகொண்டதுடன் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...