கிருஷ்ணகுமார்
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பான் ஆலய மண்டலாபிசேக பூர்த்தியினை முன்னிட்டு பால்க்குட பவணியும்1008 சங்குகள் அடங்கிய சங்காபிஷேக பூஜையும் இன்று நடைபெற்றது.

ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்றன.
கிரியைகள் அனைத்தும் கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ க.வடிவேல் குருக்களினால் நடாத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குடம் பவணி நடைபெற்றது இப்பால்குட பவனியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பால்குடபவணி ஆலயத்தை வந்தடைந்ததும் கிரியைகள் இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் 1008 சங்குகளுக்கு விசேட அபிஷேக பூஜைகள் இடம்பெற்று பால்குட அபிஷேகம் இடம்பெற்று கும்ப பூஜை இடம்பெற்று பிரதான கும்பங்கள் ஆலயத்தில் வலம் வந்து 1008 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இன்றைய மண்டலாபிஷேக பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
