தொற்றா நோய்களுக்கான பரிசோதனை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீர் தலைமையில் இவ்வாரம் காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கான தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி திட்டம் காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றன.

இதில் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது குருதி குளுக்கோஸ் மட்ட பரிசோதனை, குருதி கொலஸ்ட்ரோல் மட்ட பரிசோதனை, உடல் திணிவு சுட்டி பரிசோதனை மற்றும் குருதி அமுக்க பரிசோதனை போன்றன மேற்கொள்ளப்பட்டன.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *