பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு HPV எனப்படும் கருப்பை கழுத்து புற்று நோய் தடுப்பூசியும் , தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு aTd எனப்படும் வளர்ந்தோருக்கான ஏற்புத்தடை தடுப்பூசியும் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (21) இடம் பெற்றது.

இதே வேளை அப் பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர்கள், மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
