அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகள் மீட்பு

பாறுக் ஷிஹான்

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஈச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை(13) தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்மாந்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த தேக்க மரப்பலகைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத்தின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கரின் வழிகாட்டலில் பொலிஸ் குழு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *