கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Date:

ஆற்றோரத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (17) கசிப்பு உற்பத்தி தொடர்பில் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கசிப்பு உற்பத்திற்கான 200 லீற்றர், 2 இரும்பு பரள், செப்பு குழாய் ,1 கேஸ் அடுப்பு , 4 அடி நீளமுடைய ரப்பர் குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் இக்கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிநடத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

காரைதீவு  பிரதேச சபையின்   04 ஆவது சபையின் 1 ஆவது...

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று...

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...