இறக்காமம் பிரதேச சபை உறுப்பினராக கே.எல்.சமீம் தெரிவு

2025 ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இறக்காமம் பிரதேச சபைக்கு சுயேட்சைக்குழு கால்பந்து சின்னம் சார்பில் போட்டியிட்ட கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 06.05.2025 அன்று நடைபெற்று முடிந்த 2025 ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவிற்கமைய இறக்காமம் பிரதேச சபை 6,7 ஆம் வட்டாரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட கே.எல்.சமீம்(எல்.எல்.பி) தலைமையிலான சுயேட்சை அணி 436 வாக்குகளை பெற்றுள்ளது.

ஒரு உறுப்பினரை மேற்குறித்த சுயேட்சைக்குழு பெற்றுக்கொண்டுள்ளதுடன் 13 உறுப்பினர்களை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை வரலாற்றில் முதன் முதலாக சபைக்கு சுயேட்சைக்குழு சார்பில் கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் காலத்தில் இறுதியாக இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கே.எல்.சமீம் (எல்.எல்.பி) சுமார் 4 மணித்தியாலயங்கள் தனது உரையினை மேலும் மக்களுக்கான தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

சிங்களத்தில் நல்ல பாண்டித்தியம் உள்ள இவர் அனைத்து மக்களையும் கவரும் தன்மை கொண்டவர் என்பதுடன் எல்லோருடனும் சகஜமாகப் பழக்ககூடியவராவார். அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலியின் வண்ணாத்தி பூச்சி கட்சியின் ஊடாக நேரடி அரசியலை ஆரம்பித்து சிலகாலம் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் பயணித்து பின்னர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வோடு இணைந்து இறக்காமம் பிரதேசத்திற்கு தன்னால சேவைகளை செய்தவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *