ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய பொது அமைப்புகள் தேர்தலில் போட்டி

Date:

பாறுக் ஷிஹான்

நுஜா ஊடக அமைப்பு மற்றும் பல பொது அமைப்புகளை முன்னிலைப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக வெள்ளிக்கிழமை(14) அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

நுஜா ஊடக அமைப்பின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் சுயேட்சைக் குழவிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது, ​​சுயேட்சைக்குழுவின் ஆலம்குளம் இணைப்பாளரும், எஸ்டோ அமைப்பின் கள உத்தியோகத்தருமான சப்ராஸ் பங்கேற்றிருந்தார்.

குறித்த சுயேட்சைக் குழுவில் சிரேஸ்டவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், உலமாக்கல், பெண்கள், இளைஞர்கள் என பலரும் போட்டியிடுகின்றனர்.

மோசடி, மோசடி இல்லாத சிறந்த நிர்வாக ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரும், நுஜா ஊடக அமைப்பின் தலைவருமான சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததுடன் நிச்சயமாக அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கு தமது அணியிலிருந்து பலரும் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீ.ஐ.கா.ஸ்தாப‌க‌ த‌லைவ‌ரின் மே தின வாழ்த்துச்செய்தி

மனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக...

எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே JVPயின் வேட்பாளர்களாக இணைந்துள்ளனர்

தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆசனம் கேட்டு கெஞ்சி நின்று எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே...

மயிலத்தமடு நிலப்பிரச்சினை: விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி...

சுயேட்சை குழு தலைவர் நஸாரின் மே தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச...