சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

Date:

சர்வதேச உளநல தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று காலை நடைபெற்றது.

இலங்கையில் தற்கொலைகளில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாது மாவட்டமாக உள்ள நிலையில் இன்றைய நிகழ்வு முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இம்முனை “பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளில் மனநல சேவைகளை அணுகலுக்கான ஆதரவு” என்னும் தலைப்பில் இம்முறை உலக உளநல தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உளவள பிரிவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் தி.ரவி,உளவள வைத்திய நிபுணர் கமல்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உளவள பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் டான் சௌந்தரராஜவின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பில் செயற்படும் பல்வேறு பொது அமைப்புகளும் உதவிகளை வழங்கியிருந்ததுடன் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து உளவளத்தின் அவசியத்தினை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியானது கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக வந்த நிலையில் அங்கு வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்காவின் நாடக குழுவினரால் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மீண்டும் பேரணியானது ஆரம்பித்து மட்டக்களப்பு திருகோணமலை வீதியூடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் வரையில் சென்றது.

இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்க முன்பாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உளவளத்துறைக்கு நீண்டகாலமாக பங்காற்றிவரும் உளவளத்துறையின் மூத்த நிபுணரும் வண்ணத்துப்பூங்கா சிறுவர் பூங்காவின் தலைவருமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் அவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் உளநலத்தின் அவசியம் தொடர்பிலும் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் பல்வேறு உரைகளும் இதன்போது இடம்பெற்றன.

மனநலம் இல்லாமல் ஆரோக்கியம் இல்லை என்பதை உலக மனநல தினம் நமக்கு நினைவூட்டுகிறது. பேரழிவுகள், மோதல்கள் மற்றும் பொது சுகாதார அவசரநிலைகள் போன்ற மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசரத் தேவையை இந்த ஆண்டு எடுத்துக்காட்டுகிறது.

நெருக்கடிகளின் போது ஐந்து பேரில் ஒருவர் மனநல பாதிப்பை அனுபவிப்பதால், சரியான நேரத்தில் கொடுக்கும் ஆதரவு மிக முக்கியமானது. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட, சமூகம் சார்ந்த தலையீடுகளில் முதலீடு செய்வது உயிர்களைக் காப்பாற்றுகிறது, மீட்சியை ஊக்குவிக்கிறது மற்றும் மீட்சியை செயல்படுத்துகிறது.

இந்த நாளில், மனநல சேவை அனைவருக்கும், குறிப்பாக துன்ப காலங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மதிப்புமிக்கதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும், அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் போன்ற பல்வேறு கருத்துகள் இதன்போது பகிரப்பட்டன.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள்...

செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று...

மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம்

மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம்...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள...