கிருஷ்ணகுமார்
கிழக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு சனிக்கிழமை (08) காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் சிரேஸ் விரிவுரையாளர் திருமதி றூபிவலன்ரினா பிரான்சிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், அட்டளை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜனாபா நஹீஜா முஸாபிர், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஜனாப் வை.றாசீக், அம்பாறை பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கஸ்டங்களுக்கும் மத்தியில் சாதணை படைத்த ஆறு பெண்கள் இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கஸ்ட நிலையிலும் முன்னேற்றப்பாதையில் சென்ற பெண்களின் அனுபவ பகிர்வும் நடைபெற்றதுடன் மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் அவர்களினால் சரியாக பயன்படுத்தபடுகின்றது?, பயன்படுத்தப்படவில்லை என்னும் தலைப்பில் விசேட பட்டிமன்றமும் நடாத்தப்பட்டது.
