ஜனாதிபதியாக எவர் வந்தாலும் தனது பொறுப்பை சரிவர செய்யவதில்லை

Date:

கிருஷ்ணகுமார்

ஜனாதிபதியாக எவர் வந்தாலும் ஸ்ரீலங்கா அரசை பாதுகாப்பதில் ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புப் படையை பாதுகாப்பதில் அவர்களுடைய பொறுப்பாக அவர்களுடைய கடமையாக எடுக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி அலுவலகத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி வட்டாரக்கிளை உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று (08) மாலை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதியில் உள்ள சில வட்டாரங்களின் உறுப்பினர்கள்,கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலும் வட்டாரக்கிளை கூட்டங்களை நடாத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களில் அந்தந்த வட்டாரங்களில் வேட்பாளர்கள் தெரிவுகள் தொடர்பாக கூட்டங்கள் நடத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் எமக்கு இருப்பது இரண்டு வாரங்கள் மாத்திரம் தான் அந்த வகையில் மண்முனை தென்எருவில் பற்று மற்றும் போரதீவுப்பற்றுக்கான கூட்டங்கள் இன்று என்னுடைய அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாங்கள் கடந்த தேர்தலில் வழங்கிய வேட்பாளர்கள் உங்களுக்கு தெரியும் தேர்தல் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 25 வீதமானவர்கள் 35 வயதுக்கு குறைந்தவர்கள் இருக்க வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் இருக்கின்ற காரணத்தினால் கடந்த தேர்தலுக்கான வேட்புமனு கொடுத்த விண்ணப்பங்களை மீளாய்வு செய்ய வேண்டிய தேவைகள் காணப்படுகின்றது சில வேட்பாளர்கள் வெளிநாடு சென்றிருக்கின்றார்கள் சிலர் கேட்க மறுக்கின்றார்கள்.

அந்த வகையில் மீண்டும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். எது எவ்வாறாக இருந்தாலும் இந்த அரசாங்கத்தினுடைய அழுத்தத்தின் காரணமாக தான் இந்த தேர்தல் ஆணைக்குழு வரவு செலவுத் திட்டம் நடைபெறும் காலப்பகுதியில் வேட்பு மனுக்கான திகதியை வழங்கியிருக்கின்றார்கள்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளரை சந்தித்து நாங்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தோம். வரவு செலவுத் திட்டத்தின் உடைய விவாதம் முடிவடையும் வரைக்கும் மூன்றாம் வாக்கெடுப்புக்கான வாசிப்பு 21 ஆம் திகதி இடம்பெறும். அந்த திகதிக்கு பிற்பாடு ஒரு திகதியை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு குறிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

அதற்கான காரணம் இன்று உண்மையில் பாராளுமன்ற அமர்வு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது அவ்வாறான ஒரு நேரத்தில் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்க முடியாத அளவிற்கு இந்த அரசாங்கத்தின் அழுத்தத்தினால் இந்த தேர்தல் ஆணைக்குழு இந்த திகதியை வழங்கியது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம்.

ஏனென்றால் மக்கள் எங்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான காரணம் மக்களுடைய கோரிக்கைகளை மக்கள் சார்ந்த பிரச்சினைகளை மிக முக்கியமாக வரவு செலவு திட்டம் இடம்பெறுகின்ற போது எங்களுடைய மாவட்ட ரீதியிலான பிரச்சினைகளை அந்த உயரிய சபையிலே முன் வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றார்கள்.

ஆனால் அந்த காலப்பகுதியிலே வேட்பு மனு தாக்கல் செய்வது வந்தால் எங்களுக்கு எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பொறுப்பை சரியான முறையில் செய்ய முடியாத சூழல் உருவாகி இருக்கின்றது.

அந்த வகையில் அரசாங்கத்தினுடைய தேவை மிக விரைவாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதாகும். நாங்களும் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம் ஆனால் நாங்கள் கேட்டுக் கொண்டது ஒரு வாரத்தின் பின்னர் இந்த வேட்பு மனு தாக்கலுக்கான திகதியை வழங்க வேண்டும் என்பதாகும். ஆனால் அரசாங்கத்திற்கு அவ்வாறே வேட்பு மனு கூறினால் கடந்து போகும் ஒவ்வொரு நாட்களிலும் என் பி பி அரசாங்கம் தங்களுடைய ஆதரவை குறைத்து வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் மக்கள் உண்மையான புரிந்துணர்வு இல்லாமல் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உண்மையை சொல்லும் தரப்புகளுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தாலும் கூட நாட்டில் நடைபெறுகின்ற விடயத்தை பார்த்தால் என் பி பி அரசாங்கம் தினமும் தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டு செல்கின்றது.

ஏனென்றால் குறிப்பாக இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதாக கூறினார்கள் ஆனால் அதனை நிறைவேற்ற வில்லை அதனைத் தொடர்ந்து சம்பள உயர்வு தொடர்பில் ஆசிரியர்களுக்கு சுபோதினி திட்டத்தின் ஊடாக கூறப்பட்ட 2/3தருவதாக கூறினார்கள் அதனை செய்யவில்லை, அடிப்படை சம்பளம் 15000 இருந்து 40 ஆயிரத்திற்கு அதிகரித்து இருக்கின்றது என்கின்ற மாயயை உருவாக்கினாலும் கூட சம்பளத்தின் உயர்வு 6000 ரூபாய் பெறுமதியான உயர்வு தான் இந்த வருடத்தில் ஏற்படும். அடுத்த வருடம் 1500 ரூபாய் உயரும். இவ்வாறு அரசாங்கம் ஒவ்வொரு தினமும் தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டு வருகின்றது.

ஏனென்றால் கடந்த தேர்தலில் தபால் மூல வாக்கெடுப்பில் கூடுதலாக அரச ஊழியர்கள் தென்னிலங்கையில் அரசுக்கு அதிகளவான வாக்குகளை வழங்கி இருந்தனர். இந்த செல்வாக்கை இழக்கின்ற காரணத்தை வைத்துக் கொண்டுதான் மிக விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் திணைக்களத்திற்கு பாரிய அழுத்தங்களை வழங்கி இன்று தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் நாங்கள் அனைத்து சபைகளிலும் கிட்டத்தட்ட 11 சபைகளில் நாங்கள் போட்டியிடுவோம். இந்த 11 சபைகளிலும் இரண்டு சபைகளில் நாங்கள் சிறுபான்மையினராக தான் இருக்கின்றோம். ஆனால் நாங்கள் ஆதரவளிக்கும் ஒரு தரப்பு அந்த சபைகளிலும் ஆட்சி அமைக்க வேண்டும். ஏனைய 9 சபைகளிலும் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு உள்ளூராட்சி தலைவரை உருவாக்குவது தான் எங்களுடைய நோக்கம்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எமது வேட்பு மனுப்பத்திரங்களை நிரப்பி வேட்புமனு தாக்கல் செய்து எங்களுடைய தேர்தல் வெற்றிக்காக எங்களுடைய பாதையை நாங்கள் தொடங்குவோம்.

நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நேர்காணல் நிகழ்ச்சியைப் பொருத்தவரை தமிழ் மக்களுக்கு நடந்த அநீதி அதேபோன்று பொறுப்பு கூறல் விடயங்களில் ஈஸ்டர் குண்டு வெடிப்பாக இருக்கலாம், யுத்தத்தால் கொல்லப்பட்ட மக்களாக இருக்கட்டும், இந்த இரண்டு விடயங்களுக்கும் தொடர்ச்சியாக மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஜனாதிபதியினதும் நிலைப்பாடை சர்வதேச சமூகத்திற்கு தெரியும் அளவுக்கு அவர் அதனை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்.

அந்த வகையில் இந்த நாட்டிலே உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக ஒரு நீதி கிடைக்காது என்பது நாங்கள் தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வரும்; விடயம். இதனால்தான் சர்வதேச ரீதியிலான பொறிமுறை ஒன்று வேண்டும் என கூறுகின்றோம். ஏனென்றால் நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய போர் குற்றங்கள் மற்றும் கோட்டாவினுடைய போர் குற்றங்கள் அனைத்தையும் அதற்கு அடுத்தபடியாக தன்னை அவர்களுடைய எதிரியாக காட்டிக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க நியாயப்படுத்துகின்றார்.

இது அரசை பாதுகாக்கும் வகையில் இவர் செயற்படுகின்றார். அதே விடயத்தை தான் இன்று அனுரகுமார திசாநாயக்க அவர்களும் செய்து கொண்டிருக்கின்றார். ஏனென்றால் அனுரகுமார திசாநாயக்க அவர்களின் அரசாங்கத்தின் கீழ் பொறுப்பு கூறல் விடயத்தில் எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அண்மையில் ஜெனிவாவில் விஜித ஹேரத் அவர்களுடைய அந்த உரையில் அவர் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பிலும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மற்றும் உண்மை கண்டறியும் ஆணைக்குழு பற்றியும் பேசயிருக்கின்றார். இந்த மூன்று விடயங்களையும் பாதிக்கப்பட்ட சமூகமாகிய தமிழ் மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் கடந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக போதிய அளவு நிதி ஒதுக்கப்படாததன் காரணத்தினால் நிதி ஒதுக்கீடு போதாது என்று தான் காணமலாக்கப்பட்டோரின் அலுவலகத்தில் விசாரணை முன்னெடுக்க முடியாது என்று அந்த நேரத்தில் இருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தில் இருந்த பணிப்பாளர் ஜனாதிபதியை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தபோது 2023 ஆம் ஆண்டில் அவர் கூறியிருந்தார்.

இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கம் ஒதுக்கிய நிதியை விட 4 மில்லியன் குறைவாகத்தான் இந்த காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு ஒதுக்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் நாங்கள் கூறும் விடயம் என்னவென்றால் ஜனாதிபதியாக எவர் வந்தாலும் ஸ்ரீலங்கா அரசை பாதுகாப்பதில் ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புப் படையை பாதுகாப்பதில் அவர்களுடைய பொறுப்பாக அவர்களுடைய கடமையாக எடுக்கின்றார்கள். இதுதான் அதனுடைய வெளிப்பாடு.

இதில் மிக முக்கியமாக மகிழ்ச்சியை தந்த ஒரு விடயம் அந்த நேர்காணலில் ஒரு பெண்மணி எழுந்து மயிலத்தமடு மாதவனை பிரச்சனை தொடர்பில் குரல் எழுப்பி இருந்தார். அந்த பெண்மணி இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த போது என்னை சந்தித்திருந்தார். பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்று பார்வையிட நான் கூறியிருந்தேன். அவரும் சென்று பார்த்திருந்தார். அந்த வகையில் இன்று மயிலத்தமடு மாதவனை பிரச்சனை கூட சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லக்கூடியதாக எங்களுடைய முயற்சிகள் முடிவடைந்து இருக்கின்றன.

அதேபோன்றுதான் அந்த மயிலத்தமடு விடயத்தில் அவர் கூறிய பதில் கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு பதில். அவர் அதில் கூறிய விடயம் சிஸ்டம் பி என்பது தமிழ் பேசும் மக்களுக்கும் வர்த்தக துறைக்கும் ஒதுக்கப்பட்ட அந்த நிலம் சிஸ்டம் பி என்று. ஆனால் நாங்கள் முன்வைத்த கோரிக்கை ஒரு வர்த்தமானி மூலம் அதனை மேய்ச்சல் தரையாக அறிவிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறி இருந்தோம். ஆனால் ஜனாதிபதி சர்வதேச ஊடகத்திற்கு முன்னால் சென்று பொய்கூறி வந்திருக்கின்றார்.

இந்த நாட்டிலே தற்பொழுது நிகழும் நிகழ்வுகளுக்கு இது ஒரு சிறந்த முன் உதாரணம் இந்த நாட்டிலே நீதி அமைச்சர் கூறுகின்றார் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று. முதலாவது முறையாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு விஜித ஹேரத் ஜெனிவாவிற்கு சென்று தாங்கள் அதனை செய்யப் போகின்றோம் என்கின்ற விடயத்தை பற்றி நீதி அமைச்சரிடம் கேட்டபோது அவர் கூறுகின்றார் தன்னுடைய அமைச்சின் கீழ் அது வராது என்று. ஆனால் இன்று பார்த்தால் அவர் கூறுகின்றார் அது முன்னெடுக்கப்படும் என்று.

அந்த வகையில் இந்த அரசாங்கத்திற்கு எந்த ஒரு தெளிவான வேலை திட்டம் இல்லாமல் மக்களுக்கு பொய்களை கூறி வாக்குகளை பெற்று வென்று வந்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பொய்களை கூறி தமிழ் மக்களை ஏமாற்றியது போன்று இந்த அரசும் அதனை தொடரும். அதற்கான காரணம் ஜனாதிபதியாக எவர் வந்தாலும் இலங்கை அரசை பாதுகாப்பதை தங்களுடைய பொறுப்பாக பார்க்கின்றார்கள்.

சில விடயங்களுக்காக பகிரங்க விவாதம் போவதாக இருந்தால் விவாதிக்கக்கூடிய தகுதி உடையவர்களுடன்தான் நாங்கள் விவாதிக்க முடியும். அவ்வாறு இல்லாதவர்களுடன் விவாதத்திற்கு செல்வது என்பது பொருத்தம் இல்லாத விடயம்.

பாராளுமன்றத்தில் மிகத் தெளிவாக பாதுகாப்பு அமைச்சரிடம் இவ்வாறு ஒரு சந்திப்பு தொடர்பாக நான் எனக்கு கிடைத்த தகவலை பற்றி கூறியிருந்தேன். அதனை விசாரணை செய்து தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டிருந்தேன் அதற்கு அவர் பதில் அளிக்காமல் தப்பி ஓடி விட்டார்.

அதற்கு அரசாங்கம் தான் பதில் கூற வேண்டும் பாராளுமன்றத்தில் சிறப்பு உரிமை இருக்கின்ற காரணம் வந்து இவ்வாறான விடயத்தை பாராளுமன்றத்தில் தெளிவாக கேட்கலாம் அதற்காகத்தான் பாராளுமன்ற உறுப்பினருக்கு அந்த சிறப்புரிமை வழங்கப்படுகின்றது.

அதைக் கூட தெரியாத முட்டாள்களிடம் விவாதிக்க செல்வது என்பது ஒரு தேவையற்ற விடயமாக நான் பார்க்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று...

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...