கந்த சஸ்டி விரதம் இன்று…

Date:

முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஸ்டி விரதம் இன்று ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று கந்தசஸ்டி விரதம் வெகுவிமர்சையாக ஆரம்பமானதுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் இன்றிலிருந்து விரதம் அனுஸ்டிக்கின்றனர்.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று கந்தசஸ்டி விரதம் ஆரம்பமானது.

இன்று காலை ஆலயத்தில் விசேட யாக பூஜை,அபிசேக பூஜை நடைபெற்றதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று கந்தசஸ்டியை முன்னிட்டு வைக்கப்பட்ட கும்பத்திற்கு அடியார்கள் பூயிட்டு வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.

கந்த சஷ்டி விரதம், முருகப் பெருமானின் சூரசம்ஹாரத்தை நினைவுகூரும் மிக முக்கியமான விரதமாகும். ஐப்பசி மாத சுக்லபட்ச பிரதமை தொடங்கி சஷ்டி வரையிலான ஆறு நாட்கள், பக்தர்கள் கடுமையான உண்ணாவிரதம் கடைப்பிடித்து, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, தீபாராதனைச் செய்கின்றனர்.

இன்றைய தினம் ஆயிரக்கணக்கான அடியார்கள் விரத ஆரம்ப பூஜையில் கலந்துகொண்டதுடன் ஆறாம் நாளான திங்கட்கிழமை சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் மறுநாள் விரதம் நிறைவுபெறும்.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை...

தொல். திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும்...

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான...

வெள்ள நீரால் பிடிக்கப்பட்ட அதிகளவான மீன்வகைகள்

அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும்...