அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்

Date:

றோகண விஜயவீரவின் பெறாமகன்கள் இங்கே உலாவிக்கொண்டு இருக்கின்றார்கள்.அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்.

யாழ்ப்பாண மண்ணும் கிழக்கு மண்ணும் ஒன்றாக இருக்க கூடாது என கங்கணங்கட்டி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் உட்பட இரவோடு இரவாக வழக்கின் தீர்ப்பை கொண்டு வந்து உயர்நீதிமன்றத்தில் வடகிழக்கை பிரித்து பிளந்த வரலாறு தொடர்பில் தற்போது எம்மிடையே நடமாடுகின்ற தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்துக்கள்.

இன்றுடன் 6 மாதங்கள் கடந்தவிட்டன.தேர்தல் காலங்களில் எத்தனை வாக்குறுதிகளை அவர்கள் அள்ளி வழங்கினார்கள் என்று சிந்துத்து பாருங்கள். என காரைதீவு இலங்கை தமிழரசு கட்சி கிளை செயலாளர் கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷ் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைமையிலான பிரதேச சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(30) விவேகானந்தா விளையாட்டுக் கழக மண்டபத்தில் நடைபெற்ற வேளை அங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

எமது வீர போராட்டத்தை இடைநடுவில் துரோகம் செய்தவிட்டு கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட மண்ணிற்கு வந்து மஹிந்த ராஜபக்சவின் அஜந்தாவில் எங்களுக்கு பல வியாக்கியானங்களை சொல்லி அம்பாறை மாவட்ட இளைஞர்களை அடிமுட்டாள்கள் ஆக்கி சென்றுவிட்ட கருணா என்பவர் இந்த கிழக்கு மண்ணின் மைந்தன், எமது பொக்கிஷம் இன்று நாங்கள் கண்ணியத்துடனும் கவனத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்ற எமது அருமைத்தம்பி சாணக்கியனை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறுகின்றார்.இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இந்த துரோகி கருணாவிற்கு வடகிழக்கு மக்கள் சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும்.எமது கட்சி என்பது நேற்று முளைத்த காளான்கள் அல்ல.இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக 1948 ஆண்டு உருவாக்கப்பட்ட பெரும் வரலாற்றைக்கொண்ட மாபெரும் சக்தி எங்கள் கட்சியாகும்.இன்று எமது அன்புத்தம்பி சாணக்கியன் அவர்கள் கடந்த காலங்களில் எமது தலைவர்கள் பாராளுமன்றத்தில் பல மொழிகளில் உரையாற்றியது போன்று இன்று பேரினவாத சக்திகளுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்.அழகாக அவர்களது சிங்கள மொழியில் பதில் வழங்கி கொண்டு இருக்கின்றார்.அழகாக ஆங்கில மொழியில் பதில் கொடுத்து கொண்டிருக்கின்றார்.

அழகாக மட்டக்களப்பு தமிழில் பதில் வழங்கி கொண்டிருக்கின்றார்.தம்பி சாணக்கினை பற்றி எவரும் எதுவும் சொல்லலாம்.நான் பெருமைப்படுகின்றேன்.இளம் இரத்தம் துடித்துக்கொண்டிருக்கின்றது.நாங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய காலத்தேவை இருக்கின்றது.இன்று ஆட்சிபீடம் ஏறி இருக்கின்ற இந்த அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்.

யாழ்ப்பாண மண்ணும் கிழக்கு மண்ணும் ஒன்றாக இருக்க கூடாது என கங்கணங்கட்டி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் உட்பட இரவோடு இரவாக வழக்கின் தீர்ப்பை கொண்டு வந்து உயர்நீதிமன்றத்தில் வடகிழக்கை பிரித்து பிளந்த வரலாறு தொடர்பில் தற்போது எம்மிடையே நடமாடுகின்ற தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்துக்கள்.

இன்றுடன் 6 மாதங்கள் கடந்தவிட்டன.தேர்தல் காலங்களில் எத்தனை வாக்குறுதிகளை அவர்கள் அள்ளி வழங்கினார்கள் என்று சிந்துத்து பாருங்கள்.இந்த அரசாங்கத்திடம் தற்போதைய எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயநிரணய உரிமை பற்றி கேட்கின்றார்கள்.

அவர்களிடம் உரிய பதில் இல்லை.மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் எங்களை முன்னின்று கொன்றார்கள்.ஆனால் இவர்கள் தலைமைய தடாவி செவியை புடுங்குகின்றார்கள்.எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் எம்மை நாமே ஆள வேண்டும்.இந்த நாட்டினுடைய அரசாங்கம் எங்க வேண்டுமானாலும் இருக்கட்டும்.எங்கள் ஆளுகையை அதிகாரங்களை நாங்கள் தான் ஆள வேண்டும்.

எனவே தான் வட கிழக்கில் உள்ள சகல சபைகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றும் என உறுதிபடக் கூறுகின்றேன்.எனவே இந்த தேர்தலை மிகக்கவனமாக எல்லோரும் நோக்க வேண்டும்.றோகண விஜயவீரவின் பெறாமகன்கள் இங்கே உலாவிக்கொண்டு இருக்கின்றார்கள்.இன்று இந்த ஜேவிபியை சிங்கள மக்கள் விமர்சித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஏதோ மக்கள் அன்று சிந்தித்தார்கள்.வேறு தெரிவில்லை வாக்களித்தார்கள்.இன்று ஏன் வாக்களித்தோம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.எனவே நாங்கள் சிந்திக்க வேண்டும்.எமது சபையை நாங்கள் கைப்பற்ற வேண்டும்.என்றார்.

இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், இராசமாணிக்கம் சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், சி.ஸ்ரீநாத் ஆகியோர் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மருதமுனை அக்பர் வீதி புனரமைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100...

விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதை மீண்டும் மக்கள் பாவனைக்கு…

மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள்...

இயற்கையுடன் கூடிய பயிற்சி நிலையம் அமைக்க செயற்திட்ட முன்மொழிவு

மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில்...

பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு...